பெண் மனம்
ஏலே கழுகுக் கண்ணுக்கார இளைஞா
என் மீது இனியும்
நீ கண் வைக்காதது ஏண்டா?
உனக்காகத்தான் பூத்திங்கு காத்திருக்கிறேன்
என்னை இன்று கொஞ்சம் திரும்பிப்பாரடா...
கிருஷ்ண பருந்து போல பறந்து வந்து
என்னை நீ கவ்விச் செல்வது என்று..?
சொல்லுடா என் தாய் மாமா?
இனியும் என்னை காக்கவைக்கலாமா?
நீயே என்னை காதலிக்க மறுத்தால்...
இந்த ஏழையை யார் வந்து திருமணம் செய்வார்..!
காத்திருக்க இன்னும் காலமில்லை
பழுத்துக் கொண்டிருக்கும் கன்னி நான்
முழுமையாய் முதிரும் முன்னே...
அழகில் மயங்கி பறித்திட்டுப்போட
என்னிளம் மாமனே...!
இந்த ஏழை எழில்தான் வீணாய் போகும் முன்னே...
உன் வீட்டில் கேட்கும் பொன்னகைதான்
என்னால் தர முடியாது...ஆனால்
நீ விரும்பிக் கேட்டால்
எவ்வளவு வேண்டுமானாலும் தருவேன்!
உன் மூச்சு முட்ட முத்தப்புன்னகைதான்..!