வாலிப மனசு
அரும்பு மீசையில் ஆரம்பித்து
குறும்பு பார்வையில் கோலமிட்டு
கொடிகட்டிப்பறக்கும் வாலிபம்
பள்ளி + கல்லூரியெனும் காவிரி நதிபோல
சில காலம் தென்றலில் நடக்கும்
தேன்மழையில் மிதக்கும்;
பின்
அடிக்கடி 'ஹேங்' ஆகி
கம்யூட்டர் மனதுக்குள்
கனவுகளுடனும் நினைவுகளுடனும்
தனி ஆவர்த்தனம் வாசிக்கும்,
மனதுக்குள் வைரஸ் வந்து சேரும்,
அப்புறம்
அதை சரி கட்ட 'ஆன்டி' வைரசுடன்
அலைமோதும், அலைபாயும்
வாலிப மனசுக்கு கடிவாளம் போட
ஒரு கல்யாணமும் நடக்கும்.
அதற்குப்பின் தான்
வாழ்க்கையே புரியும்,
வழுக்கைக்கும்
வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசமே
வாழ்க்கையே முதலில் வழுக்கும் - பின்
வழுக்கையே வாழ்க்கை ஆகிவிடும்...!
எப்போதாவது இனிக்கும்,
எப்படிப்பார்த்தாலும் கசக்கும் -
வாலிபம் காணும் வாழ்க்கையே அது தான்...!