காதல் வலி

காதல் வலி

என் இதயமும்
கருவறைதான்
நீ இருப்பதால்

என் உயிருக்குள்
உயிர்யாய்
நாளும் வளர்கிறாய்

உன் பார்வை
உள்ளெ உதைக்கும்
பொழுது ரசிக்கிறேன்

சுகமான
சுமைதான் உன்னை
இறக்கிவிட மறுக்கிறேன்

இன்பமான வலி
என
நாளும் துடிக்கிறேன்

ஜெகன் ரா தி

எழுதியவர் : ஜெகன் ரா தி (5-Nov-16, 4:32 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 142

மேலே