நீ வராததால்

மரங்களில் இருந்து
இலைகள் உதிரவில்லை
நீ வராததால்..
சூரியன் மேற்கே
உதிக்கவில்லை
நீ வராததால்..
செடிகளில் பூக்கள்
பறிக்கபடவில்லை
நீ வராததால்..
என் இரவுகள்
விடியலாய் விடிகிறது
நீ வராததால்..
காற்று கூட
என் பக்கம் வீசவில்லை
நீ வராததால்..
தென்றல் என்னை
தீண்டவிவ்லை
நீ வராததால்..
கடலில் சென்று
கால் நனைக்கவில்லை
நீ வராததால்..
கோவிலுக்கு சென்றேன்
சாமி கும்பிடவில்லை
நீ வராததால்..
என் நேரங்கள்
ஓடவில்லை
நீ வராததால்..
என் நாட்கள்
நகரவில்லை
நீ வராததால்..