இறைவா இது நியாயமா
இறைவனை கனவில் கண்டேன்
நலமா என்றான் நலம் என்றேன்
மனதில் கேட்டுவிடலாம் என
உதித்தது ஒரு கேள்வி ???
யாவும் தெரிந்த கடவுளாயிற்றே
மனதில் ஏழும் கேள்வியை கேள் என்றார்
நானும் தயங்கி தயங்கி கேட்டேன்
அவரிடம் நேரிடையாக ????
காசில்லா பக்தனுக்கு தூரமாய்
காசுள்ள பக்தனுக்கு அருகிலும்
காட்சி தருகிறாயே நியாயமா என கேட்க
சிறிதாய் புன்முறுவல் பூத்து
பதில் சொன்னார் ???
தாயிற் சிறந்த கோயில் இல்லை என்றேன்
நீங்கள் வணங்க வில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன்
நீங்கள் மதிக்க வில்லை
தூணிலும் துரும்பிலும் நீங்கள்
காணும் அனைத்திலும் இருக்கிறேன்
என்றேன் நீங்கள் உணரவில்லை
ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே
செய்வது போல் என்றேன் செய்யவில்லை
எனக்கான உருவத்தை
எனக்கான இடத்தை
எனக்கான நேரத்தை
எனக்கான விழாக்களை
எனக்கான வழிபடும் முறைகளை
எல்லாம் நீங்களே முடிவு செய்துவிட்டு
இப்போது என்னை காண
கட்டணமும் வைத்துவிட்டு
என்னை காட்சி பொருளாக்கி விட்டு
என்னையே கேள்வி கேட்பது
என்ன நியாயம் என்றார் ???
சட்டென விழித்தேன்
உறக்கத்தில் இருந்து மட்டுமல்ல
என் அறியாமையிலிருந்தும்.....