காதல் தேசம்

கனவு கண்டால்
நடக்குமென்று
பகலில் கூட உறங்குகிறேன்
அவள் நினைவில்

அவளைக்கண்ட
அனைவரும் மன்மதனாய்
மாறினர்
அவளை மயக்க
நான் மட்டும் மனிதனாய்
மாறினேன்
அவளை மணக்க
பெண்ணே
பூக்களின் தலைக்கணம்
குறைவது எப்போது தெரியுமா ?
அது உன் தலையில்
உள்ளபோதுதான் .
அவளைப் பார்க்கும்
ஆண்களெல்லாம்
கவிஞராகிறான் ...

அவள் பார்க்கும்
ஒருவன் மட்டும்தான்
அதில்
கம்பனாகிறான் ...

கம்பன்வீட்டு கட்டுத்தறியும்
கவிபாடும்
அவள் வீட்டு கட்டாந்தரையுமல்லவா
கவிபாடுகிறது

எழுதியவர் : குமார் (12-Nov-16, 4:51 pm)
Tanglish : kaadhal dhesam
பார்வை : 506

மேலே