கட்டணக் கழிப்பறை
கட்டணக் கழிப்பறை
வேகமாக வந்தான் ஒரு இளைஞன்
புது 500 ரூவா இப்பத்தான் பாங்க் அக்கவுண்டலிருந்து
எடுத்துக்கிட்டு வரேன். பாக்கி கிடைக்குமில்ல ?
500 க்கா 100 க்கே சந்தேகம் ...இந்த ஏரியாவுல அவ்வளவு
ஓட்டமில்ல ...
அவசரம் அண்ணே...
500 ஐ வாங்கிப் பார்த்தான் கழிப்பறை கல்லா !
சரி போய்க்கோ
நோட்டு ...!
நான் ஓடிட மாட்டேன்..போயிட்டுவா
திரும்பி வந்தான் கல்லா 500 ஐத்திருப்பிக் கொடுத்தான்
என்ன அண்ணே பாக்கி தராம புது 500 க்கு செல்லாத பழைய 500 ஐத் தர ?
30 டிசம்பர் வரை பழைய 500 ஐ பாங்கில கொடுத்து மாத்திக்கலாமில்ல ..
எனக்கும் அவசரம் ...உன் அவசரத்திற்கு நான் உதவினேன் .என் அவசரத்துக்கு
நீ உதவலாமில்ல ...?
அண்ணே நீ பெரிய ஆளு ....!
ஐநூறை நீ மாத்தினத்துக்கு அப்புறம் உன்னிடமும் புதிய 500 என்னிடமும்
புது 500 ! 500 க்கு 500 சரி . உதவிக்கு உதவி . அதுமட்டுமில்ல
நீ கட்டணமின்றி இலவசமாக சிறு நீர் கழிக்க அனுமதித்திருக்கிறேன் .
அதை நீ நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் !
அது வேறையா........!!!!
----கவின் சாரலன்