தல சுத்துது
சமீபத்தில் படித்த ஒரு நகைச்சுவை
ஒரு ரூம்ல ஐந்து பேர் சேர்ந்து இருந்தாங்க அவங்க பெயர்
1 பைத்தியம்
2 முட்டாள்
3 மூளை
4 யாரோ
5 எவனோ
ஒரு நாள் யாரோவுக்கும் எவனோவுக்கும் சண்டை. மூளை பாத் ரூம் போயிருந்தான்.சண்டையில எவனோ செத்துட்டான்.உடனே பைத்தியம் போலீசுக்கு போன் போட்டு, "சார் யாரோ ,எவனோவா கொன்னுட்டான் சார்"
போலீஸ் கடுப்பாகி, "பைத்தியமாடா நீ ?"
பைத்தியம் : "ஹீ ஹீ ஆமா சார்"
போலீஸ் : 'மூளையில்லை ராஸ்கல் "
பைத்தியம் : " அவன் பாத்ரூம்ல இருக்கான் சார் "
போலீஸ் : "முட்டாள் முட்டாள்"
பைத்தியம் : " சார், முட்டாள் உட்கார்ந்து whats app மெசேஜ் படிக்குறாப்ல சார் "
போலீஸ் :!!!!