இறையருள் கிட்டிடுமே

அகத்தி லன்பு குடியிருந்தால்
***அமைதி வீட்டில் தங்கிவிடும் !
முகத்தில் கருணை குடியிருந்தால்
***முத்தா யொளிரு மிருவிழியும் !
தகவாய்ப் பொறுமை குடியிருந்தால்
***தடைக்கல் தாண்டி சாதிப்பாய் !
இகத்தில் பக்தி குடியிருந்தால்
***இறைவ னருளும் கிட்டிடுமே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (18-Nov-16, 1:21 am)
பார்வை : 240

மேலே