ஸ் தானம்
ஒன்றா இரண்டா
பெரிதெனக்கேட்டால்
இலக்கத்தின் வழி
இரண்டே பெரிது,
ஸ்தானம் என்றுப்
பார்த்தால்
தலைகீழாகும் எண்ணும்
எண்ணங்களும்..
எண்ணங்கள் அது கூட
மார்க்கணத்திசையின்
இலக்க ஸ்தானந்தனை
எகத்தாலமாய் ஏறிடும்,
எட்டிப்பார்த்தாலுமது
கற்பனைக்கெட்டாத
நொடியதில் மாறும்
விதம்கண்டு..
எப்படிப் பார்த்தாலும்,
வாழ்வின்
சந்தர்ப்பங்கள் பல
மறைமுகமாகவேனும்
பறைசாற்றிக் கொண்டேதான்
இருக்கிறது இதை,
மானிடர் உணர்ந்தாலும்,
உணராவிட்டாலும்..