என்னருகே நீயிருந்தால்

என்னருகே நீயிருந்தால்.....

காதல் இம்சைகள் தந்தென்னை கொல்கிறாய்
உன் விழி வழியாலே கவர்ந்தென்னை
செல்கிறாய்
கள்வா உன் வாசங்கள் தந்தென்னை வெல்கிறாய்
உன் கவி மொழியாலே என் மனதை களவாடி செல்கிறாய்....

என் துன்பங்களை கடன் வாங்கிக்கொள்கிறாய்
வழிந்தோடும் கண்ணீரை உன் மடியினில் தாங்கிக்கொள்கிறாய்
மாறிடும் என் வானிலையில் உன் வானவில் தோன்றிட செய்கிறாய்
இமை மூடா என் இரவுகளை உன் வரவால் விடிந்திடச்செய்கின்றாய்....

மலர்கின்ற என் அதரங்களை உன்
இதழால் நீயும் சிறைப்பிடிக்கிறாய்
விழி திறக்காத என் பெண்மையை
உன் தீண்டலில் மலர்ந்திட செய்கிறாய்
வாய் பேசா என் வார்த்தைகளை என் விழிகளால் படம்பிடித்துக் கொள்கிறாய்....

இருள் சூழ்ந்த வாழ்க்கையில் என் ஒளியாக நீ வந்தாய்
வரமெதுவும் வேண்டாமே என் வரமாக
என்னருகில் நீயிருந்தால்...

எழுதியவர் : அன்புடன் சகி (24-Nov-16, 10:16 pm)
பார்வை : 729

மேலே