ஏனுடைத்தாய் என் மனக்குடத்தை
மலர்கள் சிரிக்கும் வண்ண பூஞ்சோலையில்
உலவும் இளந்தென்றலே என்னைத் தீண்டாதே...
நிலவு ஒளிரும் இரவு வேளையில்
கலந்து விட்டது இன்ப வேதனையும்......
தூங்கும் விழிகள் வாங்குது கனவுகள்...
ஏங்கும் பொழுதுகள் மன்னவன் நினைவுகள்...
தேனில் விழுந்த விசத்தின் துளிகள்
ஊனில் உறைந்து உயிரைக் கொள்ளுதே......
கன்னம் வருடிய அவனது விரல்கள்...
என்றன் கழுத்தை இன்று நெறிக்க
கன்னல் மொழிகள் பேசுமவனது இதழ்கள்...
சின்ன இதயத்தில் கத்திகளை வீசுதே......
உற்றவனே என்றன் நெஞ்சை உடைத்தாய்...
உண்ணாத நஞ்சை எனக்குள் தெளித்தாய்...
உன்றன் காதல் வேசம் பூண்டது...
உன்றன் நெஞ்சம் விசம் கலந்தது......
மறந்து விட்டேன் நீசெய்த குற்றம்
திறந்து வைத்தேன் இதயத்தை மொத்தம்
இழந்த விட்டேன் என்னை உன்னிடம்
இனியும் இல்லை உயிர் என்னிடம்......