வலிகள்- சகி
என் இதழ்கள் சிரித்த
நிமிடங்களை விட
என் விழிகள் அதிகம்
கண்ணீர் சிந்திய
நிமிடங்களே அதிகம்.....
அழுத விழிகளின்
அழகை எந்த சாயம்
இதழ்களில் பூசிக்கொண்டும்
மறைக்க முடியாது....
உண்மையான அன்பென
எண்ணி அவனை நேசித்தேன்....
அவனின் சந்தேகமான
வார்த்தைகளில் என்னிதயம்
தீயில் விழுந்த
வண்ணத்து பூச்சியாக
கருகியது ....
உண்மை இல்லாத
நம்பிக்கை இல்லாத
உணர்வுகளை உணராத
காதல் தரும் வலிகள்
உயிரை வதைக்கும் .....
மீண்டும் மீண்டும்
காயப்படும் என்னிதயத்தின்
வலிகள் வார்த்தைகளால்
நிச்சயம் மரணமேடை
சேரும் .....