கண்ணீர் அஞ்சலி
கனத்த இதயத்துடன்
கண்ணீர் அஞ்சலி...!!!
காணாமல் போன..
காகித ரூபாய்களுக்காக
அல்ல...!!!
அதனால் கலைந்து போன
கல்யாண கனவுகளுக்கும்...
காற்றோடு கரைந்து போன
மனித உயிர்களுக்கும்...
இன்னும் எத்தனையோ...!!!
என்று தணியும் இந்த சுதந்திர
தாகம்
என்பது போல்..
என்று முடியும் இந்த ரூபாய்
சோகம்..!!!
காத்திருக்கிறோம்
தொழில் கணவான்களே...!!!
எங்களுக்கும்
நல்வழி தெரியுமென்று....!!!
ஏன் தொழில் கணவான்கள்
என்றால்..
மன்னிக்கவும்...!!
இந்தியாவை ஆள்வது
அரசியல்வாதிகளும்
அதிகாரிகளும் அல்ல
என்பதால்..!!!!