கோவில் யானை பாகன் பணம்

கோவில் யானை
எல்லோரும் காசை வைத்தார்கள்
துதிக்கையால் தலையைத் தொட்டு ஆசி வழங்கியது .
ஒருவன் நோட்டை வைத்தான்
தும்பிக்கை காற்றால் நோட்டை பறக்கடித்தது .
என்னத்தை ஐயா வச்ச என்று கேட்டான் பாகன்
பழைய 1000 ரூவா நோட்டை என்றான்
யானைக்குத் தெரியாதா கருப்புக்கும் வெள்ளைக்கும் வித்தியாசம்
என்றான் பாகன் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Dec-16, 10:13 am)
பார்வை : 169

மேலே