படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
உலோக விமானமல்ல
உயிருள்ள விமானம்
உயிரோடு தூக்கும் மீனை !
ஊடுருவிப் பார்க்கும்
உன்னத விழிகள்
மீன்களை நோக்கி !
இனிய பயணம்
இறக்கைகள் விரித்து
இரையினைத் தேடி !
உழைத்து
பின் உண்ணுக
உணர்த்தும் பறவை !
ஆழம் செல்க
வருகின்றது கவர
கவனம் மீன்களே !