பரிகாசம் செய்கிறது

பரிகாசம் செய்கிறது உன்
கார்கூந்தல் கார்மேகத்தை
பரிகாசம் செய்கிறது உன்
முகம் வெண்மதியை
பரிகாசம் செய்கிறது உன்
வளைந்தபுருவங்கள் காண்டீபத்தை
பரிகாசம் செய்கிறது உன்
சுடர் கண்கள் சூரியச்சந்திரனை
பரிகாசம் செய்கிறது உன்
வரிபற்கள் பச்சரிசியை
பரிகாசம் செய்கிறது உன்
தேன் இதழ்கள் தேன்கூட்டை
பரிகாசம் செய்கிறது உன்
வழுக்கும் கழுத்து மூங்கிலை
பரிகாசம் செய்கிறது உன்
நெஞ்சு மலைகளை
பரிகாசம் செய்கிறது உன்
சிற்றிடை படரும் கொடியை
பரிகாசம் செய்கிறது உன்
மிதக்கும் கால்கள் காற்றை
பரிகாசம் செய்கிறது உன்
அழகு ரதிமேனகையையும்
பரிகாசம் செய்கிறது உன்
வாய்மொழி குழந்தையின் கொஞ்சலை
பரிகாசம் செய்கிறது உன்
குறும்பு என் திமிரையும்
பரிகாசம் செய்வது தவறு
இருந்தும் செய்கிறேன்
என்னவளை போல் உலகில்
அழகு ஏதுமில்லை என்பதால்