புகைப்படம்

இறுக்கமாக இருக்கும்
எந்தன் முகத்திலும்
இயல்பான புன்னகையை
பூக்க வைத்துவிடுகிறது
அவள் புகைப்படத்தில் இருக்கும்
ஒற்றைப் புன்னகை.

"நீ நேரில் வந்தால் உன்
முகத்தை பார்க்கவேமாட்டேன்..."
என்று புலம்பிக்கொண்டிருந்தேன்
முகநூலில் புன்னகைத்துக்கொண்டிருக்கும்
அவள் புகைப்படத்தின் முன்.

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (5-Dec-16, 5:12 pm)
Tanglish : pukaipadam
பார்வை : 107

மேலே