மாவீரர் ஹைதர் அலி
ஆங்கில ஆட்சிக்கு
அணைபோட முயன்ற
முதல் போராளி.
சுதந்திரப் போராட்டத்தின்
முதல் விதை மட்டுமல்ல
வேராகவும் இருந்த
வேங்கை.
வேராக இருந்ததால் என்னவோ
வெளியே தெரியாமல் போனது
வேங்கையின் தியாகம்.
ஆங்கிலேயரை வென்ற
முதல் மன்னர்.
அவர்களுக்கு
சிம்மசொப்பனமாய்க் கர்ஜித்த
சிங்கம்.
மறைந்த பிறகும்
ஆங்கிலேயர்களை
அச்சமடையச் செய்யும்
திப்பு(லி)யைத் தந்த
அப்பா.
மாவீரர் ஹைதர் அலியின்
நினைவுநாள் (1782) இன்று...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
