ஈரம்

ஈரம்
நீண்டநாள் சோகத்திற்கு பின் இன்று
சற்று நிதானமானவனாய் தோன்றிய
சைலேந்திரன்.. ஆண்டு ஒன்றை
அழுதே கடந்த தன் மனைவி
ரேவதியின் கண்ணீருக்கு முடிவுகட்ட
முடிவெடுத்தான். ஓராண்டிற்கு முன்
தன் மகளை விபத்தில் பறிகொடுத்த
ரேவதி.. வேறொரு குழந்தையை
தன்மகளாய் தத்தெடுக்க மறுப்பு
தெரிவித்து வந்ததால்.. இன்று
அவளிடம் சொல்லாமலே அனாதை
இல்லம் அழைத்து வந்தான்.
அங்கே விளையாடும் குழந்தைகளின்
முகமெல்லாம் தன்மகளின் முகமாய்
ரேவதிக்கு தெரிய.. இன்னும் பித்தான
ரேவதி நாற்காலியில் அமர்ந்த நேரம்..
எதிரே குல்பி குச்சியோடு தன்மகள்
ஒருவருடன் நடந்து வரக்கண்டு
திகைத்தாள் தேவி. வந்தவர் தன்னை
விடுதி காப்பாளர் என்று அறிமுக
படுத்திக்கொண்டத ும்..' தன் மகள்
இவளில்லை' என்று மீண்டும்
தள்ளாடிய ரேவதியின் மனம் "இவள்
பெயர் சைந்தவி. ஓராண்டிற்கு முன்
விபத்தொன்றில் பெற்றோரை இழந்தவள்"
என்ற காப்பாளரின் வார்த்தைகளை..
சைலேந்தின்+ரேவத ி=சைந்தவி
என்றும்.. மகளை இழந்த அதே
விபத்தால் கிடைத்த இவளும் உன்
மகளே என்றும் சொல்ல..
நாற்காலியில் இருந்து இறங்கிய
தேவியை அணைத்தபடி
சைந்தவியின் பிஞ்சு இதழ்
கன்னங்களில் வரைந்த முத்த ஈரத்தின்
ஸ்பரிசம்... குல்பி கரைந்து குச்சியோடு
விரல்களை நனைப்பது போல..
ரேவதியின் பிடிவாதத்தை உருக்கி
கண்களில் கண்ணீராய் கரைத்தது..
-மூர்த்தி

எழுதியவர் : (11-Dec-16, 2:10 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
Tanglish : eeram
பார்வை : 337

மேலே