என் கல்லறை அருகே...........


என் கல்லறை அருகே...........

உதிர்ந்த பூக்களே வாருங்கள்
என் கல்லறை மீது பாயுங்கள்
மாலையாக மாறுங்கள்
உங்கள் வாசத்தோடு
என் மரணமும் நீளட்டும்

மோசமான காதலால்
நாசமான என்னை
தேற்றிக்கொண்டு அழுங்கள்
உங்கள் கண்ணீர் துளிகளோடு
என் கல்லறையும் கரையட்டும்

தாய் மடியிலே
பிறந்தவன் காதலால்
பூமியின் மடியிலே
இறந்தான் என்று என்
வரலாரிலே எழுதுங்கள்

எனக்காகவே
என் கல்லறையில்
மாலையாக இறந்துபோன
பூக்களே உங்களுக்காக
நானும் அழுகிறேன்
ஆவியாக என் கல்லறை அருகே
உங்களை பார்த்த படியே................

இப்படிக்கு......................உன்னவன்

எழுதியவர் : nanthi (6-Jul-11, 12:16 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 563

மேலே