சாதி மத பேதமில்லை என்பார்

சாதி மத பேதமில்லை என்பார்
காதல் மணம் செய்வார்,
மணம் செய்த பின்னே
மதம் மாறச் சொல்வார்;

இந்து மதம் சார்ந்தவர்
பிற மதம் மாற வேண்டும், கட்டாயம்;
பிற மத பிள்ளைகள், பெண்கள்
இந்துவாக மாறியதுண்டோ ?

அவரவர் மதத்தில்
இருந்து விட்டுப் போகட்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-11, 2:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 396

மேலே