நட்பு
உதிரம் கலவாமல்
உருவானது
ஒரு உறவு!
உயிரணுவை சாராமல்
உதயமானது
புது உறவு!
மரபணுவும் சேராமல்
மனதில் வந்தது
தனி உறவு!
எதையும் எதிர்பாராமல்
நமக்காய் ஏங்குது
அந்த உறவு!
உணர்வில் கலந்து
உயிராய் வாழும்
உன்னத உறவு!
உலகத்தார் யாவருக்கும்
கிடைக்கப்பெற்ற அந்த உறவு
"நட்பு" எனும் உயரிய உறவு!......
த.மணிகண்டன்.......