எங்கே அவள்
அவள் அணைப்பில் கவிழ்ந்திருந்தேன்,
முகத்தில ்முகம் உரசி
'அத்தான்'என்றழைத்தாள்,
புரண்டேன்,மார்பில் முகம் புதைத்தாள்.
விரல்கள் கன்னத்தில் கோலம் போட
'அன்பரே...ஏனிந்த மௌனம்'என்றாள்,
'கொண்டவள் அணைப்பில் காலம் நகர்கையில்
வாய் வார்த்தைக்கு வேலை என்ன?'என்றேன்.
மௌனமாய் சிரித்தபடி...
'கொடுப்பதற்கு ஏதுமுண்டோ?'என்றேன்.
சப்தமின்றயொரு முத்தம் தந்தாள்.
காலம் கடக்கையில்
முடிவுரைக்கு முன்னுரை துவக்கையில்
செவிப்பறை அதிர...
என் பெயர் சொல்லி ஒரு குரல் திடுக்கிட்டேன் ஒரு கனம்,
ஆடைககளை சரி செய்து
கதவின் தாழ்விலக்கி
வாசலில் விழி வைத்தேன்.
அழைத்தார் யாருமில்லை
அருகிலும் யாருமில்லை!
இங்கிதமின்றி
இம்சை செய்தவரை வைதுகொண்டே
விட்ட இடம் தொடர
விரைவாய் நான் முயன்ற போது,
அதே சப்தம்..அறையே அதிரும்படி.
அதிர்ந்தோம் இருவரும் இம்முறையில்,
அழைத்தவரெவர் என்பதுபோல் நான் நோக்க
'அத்தானின் பெயர் சொல்லி அழைப்பேனா...'
மறுப்பாய் தலையசைத்தாள்,
நிலை குலைந்த ஆடகளை சரி செய்தே
கதவிடுக்கில் கண் வைத்தேன்,
சன்னலையும் மெல்லத் திறந்தேன்.
கட்டிலின் கால் பகுதியையும் பார்த்தேன்,
எவருமிலர்...அதிர்ச்சியில் உறைந்தபோது
மீண்டும்...அதே குரல்..
இம்முறை என்னருகே...,
திடுக்கிட்டு விழித்தேன்,
என்னருகே நண்பண் ,
'மணியோ..ஐந்து..
விழித்தெழு..
.விரைவாய் செல்..வேலைக்கு'என்றான்.
குழப்பமாய் சுற்றும் முற்றும் பார்த்தேன்,
எனைக்கொண்டவளைக் காணவில்லை,
அதிர்ச்சி கலைய...
கண்ட கனவை நோவதா
எழுப்பிய நண்பணை நோவதா?
நினைவுகள் அசைபோட
மெல்லச் சிரித்தேன்.
காலையிலையே 'பல்லிளிக்கும் '
காரணம்...கேட்டான் நண்பன்,
பல்லிளிப்பையே பதிலாக்கினேன்.
முகத்தில் வெட்கம் படர,
வந்த கனவை நொந்து கொண்டு
நடந்தேன்..குளியலறை நோக்கி!!
------------------முற்றும்------------------------