பெண்
பிறப்பிற்கு ஆதியானவள் !
உலக இயக்கத்திற்கு
ஆதாரமானவள் !
அடுப்படியில் முடங்கியிருந்தாள்
பலகாலம் !
அங்கங்களின் அழகை
சந்தங்களில் பிழிந்தெடுத்த
வார்த்தைகளின் மயக்கத்தில்
கழித்தாள் சில காலம் !
ஜன்னல் கம்பிகளுக்கு
பின்னாலிருந்து மட்டுமே
உலகைத் தரிசித்தவள்
சுதந்திரக் காற்றை
சுவாசிக்க விரும்பி,
தடைகள் தகர்த்து
வெளியே வந்தாள் !
சரித்திரத்தின் பக்கங்களை
சாதனைகளால்
நிரப்ப வந்தாள் !
அணுவின் மூலம் முதல்
அண்ட சராசரம் வரை
தனக்குள் அடக்கியவள் !
ஆனாலும் அன்பு மட்டுமே
சுரக்கும் அட்சய பாத்திரமாம்
பெண்ணின் பெருமை
மண்ணில் கடைசித்துளி
காற்றுள்ளவரை நிரந்தரமாய்
நிலைத்திருக்கட்டும் .....!