தீயும் நீயும்

பெண்ணே
நீயும் நெருப்பும் என்ன
ஒரு சாதியா?!
இருவருக்கும் அன்பை
காட்டும்போது எனோ
அனலை மட்டுமே
காட்ட தெரிகிறதே!!

என்னவளே
எரியும் தீயும்
ஒரு நொடி நீர் பட்டால்
தன்நிலைமாறி தடுமாறும்
ஆனால்
ஆயிரம் கண்ணீர் உன்மீது விழுந்தும்
தயங்காத உன் உள்ளத்தைக் கண்டு
தடுமாறுதடி என் உயிர்!,

உன்னை பார்க்க வேண்டும் என்று
பார்க்கும் என் விழியும்
பார்வையில் சுடும் உன் விழியும்
மீண்டும் மீண்டும்
பதிவு செய்கிறதடி
உன் உயிரை
என் உயிரில்!!!,

அழகே
நெருப்பாக நீ இருந்தாலும்
ஏனொ நேசிக்கின்றேனடி
உயிரே உன்னை மட்டும்...!!!!!
...............................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (28-Dec-16, 6:25 pm)
Tanglish : theeyum neeyum
பார்வை : 435

மேலே