பெண்
சொல்ல இயலா
ஆயிரம் கீரலுக்கு சொந்தமானவள்
மனதால்...
வரி எல்லாம் வீண்....
அவள் வலியை சொல்லிட....
கவிதை எல்லாம் அற்பம்...
அவள் வாழ்க்கையிடத்தில்......
அழுகையையே மிஞ்சியது
அவள் வாழ்வு.....
சொல்லி முடிக்க முடியாது
அவள் வாழ்வில் படும் துயரை....
ஒரு வேளை சோறில்
ஆரம்பித்து சமூகம் வரை
அவள் படும் துயரை
ஒரு ஆணால் முழுவதுமாய் புரிந்து கொள்ளவே முடியாது...
அவள் தன் வலிகளை எல்லாம் எப்பொழுதும் காட்டிக் கொள்ளவே மாட்டாள்...
சிரித்த முகத்துடன் இருப்பாள்....
வாழ்க்கை என்றால் இது தான் என்று அவளுக்கு தெரியும்....
சிலரை போல் கவலை வந்ததென்று குடிப்பதோ தற்கொலையோ
பெண்களிடத்தில் அதிகம் கிடையாது
காரணம் பெண்கள் ஆயிரம்
ஆயிரம் வலிகளை மனதால் தாங்கி வந்தவர்கள்....
எந்த வார்த்தையிலும் சொல்லிட முடியாது அதை....
கவி எல்லாம் ஒன்றுமே இல்லை...
பெண்ணின் வாழ்க்கையின் முன்....
தன் வேதனைகளை எல்லாம்
தனக்குள்ளே தீர்த்து
தானே மருந்தாகி
ஊக்கமாகி
எழுந்து நடைபோடுகிறாள் பெண்....
அவள் யார் என்பதை அவளே தான்
முடிவு செய்ய வேண்டும்
வேறு யாரும் அல்ல.....
அவள் தைரியமானவள்.....
அவளை யாருடனும் ஒப்பிட கூடாது....
சிலர் உப்பு சப்பு இல்லா காரணங்களுக்கு நீலிக் கண்ணீர் வடிப்பர்...
அவளோ புயலை
பூந்தென்றலாய் கடப்பாள்.....
அவள் பெண்ணியத்தின் விடிவெள்ளி....
வாழ்க்கை வாழ்வதற்கே...
தடைகற்கள் எல்லாம் நொடிப் பொழுதில் உடையும்
மனதில் தைரியம் மாத்திரம் இருந்தால்....
வாழ்க்கை இசை போன்றது...
அதில் நவரசமும் உண்டு....
சந்தோசமாக வாழு...
நிமிர்ந்து தைரியமாக முன்னோக்கி செல்.....