படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
மலரும் நினைவுகள்
மலர்வித்தனர்
சிறுவர்கள் !
இனிமையானவை
இனி கிட்டாதவை
அந்தநாட்கள் !
வாங்கியபோது வராத மகிழ்வு
விட்டபோது வந்தது
பட்டம் !
கவிழாது தொடரும்
சிறுவர்கள்
வெற்றிக் கூட்டணி !
எல்லையில்லா
ஆனந்தம் அடைந்திடும்
சிறுவர்கள் !