படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வீசியது யாரோ
வானத்தில்
பொன்னை !

ஆதவன் வருகைக்கு
முன் பயணம்
உழைக்கும் வர்க்கம் !

சூரியனின் சுடர்கள்
வாழ்த்தி வழியனுப்பும்
விவசாயி !

வழக்கொழிந்து விட்டன
வண்டி மாடுகள்
உலகமயம் !

உழைப்பாளியின் கைப்பிடியில்
ஒய்வு அறியாத
சூரியன் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (1-Jan-17, 4:48 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 83

மேலே