முன்னேற்றம்
குழம்பிய குட்டையில் முகம் தெரியாது..
குழம்பிய மனதில் தெளிவிருக்காது...
ஓடிக் கொண்டேயிருக்கும் ஆற்று நீர், அது ஒடிக் கொண்டிருக்கும் வரை தான் பரிசுத்தம்...
அதே ஆற்றில் நீர் வறண்டு பள்ளமான ஓரிடத்தில் நீர் குட்டையாகத் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டால் நாளடைவில் அந்த நீர் கெட்டு, நாற்றமெடுத்து, கெட்ட கெட்ட நோய்க்கிருமிகளின் இருப்பிடமாகி அடைகிறது அசுத்தம்...
வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் மனதாலும், உடலாலும், அறிவாலும் இயங்கிக் கொண்டிக்கும் ஜீவ ஓட்டமானது மனிதனை பரிசுத்தமாக்கிய வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் அடைய வைக்கின்றன...
தேங்கிய மனிதன் முன்னேறுவதே இல்லை...