காதல் வரம்
மார்கழி காலை
பனி சூழூம் வேளை
மைனாக்களின் பாடல்
என் மனதிலே தேடல்....
பனி இரவில் உன் முகம்
கண்டேன் நிலவை போல
நிலவை சுமக்கும்
இதயம் நானடி.....
தேடா கண்களுக்கு இசையாய்
உன் கொலுசொலி
நாதம் பேசும்
என் நெஞ்சிலே.....
ஒலி கேட்ட பனித்தூளியும்
நாணம் கொண்டது
நீர்சிந்தும் தலை முடிமேல்
துள்ளி விளையாட்டிலே....
நீ இடும் கோலம் கொண்டு
சாங்ககால சிற்பம் வாழ கண்டேன்
கோலம் மேல் நீ வைத்த மலர்
உன் அழகை போல மலர்ந்தது....
மார்கழி மாத வேண்டுதல்
வரம் கேட்கும்
உன் வரம்
மைனாவே பேசிவிடு என்னோடு...