நான் திருநங்கை

எங்கள் தவறு இல்லை நீங்கள் இணைந்த தவறு
தானாக பிறக்கவில்லை
இரு உடல் இணைந்ததால் தான் பிறந்தோம்

உணர்ச்சியால் மாறவில்லை உணர்வுகள் தான் மாறினோம்
நாங்கள் உடல் மட்டும் இல்லை உயிரும் தான்

அனாதை அல்ல அனாதைகளாக விடப்படுகிறோம்
இந்த வேதனை நினைத்து கண்ணீர் சிந்திக்கிறோம் தினம் தினம்

சில வேலையில் சிலருக்கு கடவுள் நாங்கள்
பலருக்கு இரவில் வேசிகள் எங்களில் சிலர்

நாங்கள் மனிதர்கள் என்று கூட நினைக்க வேண்டாம்
எங்கள் மீதிக்காமல் இருந்தால் போதும்

எங்கள் யாருக்கும் இல்லை தீங்கு
இறைவனின் படைப்பில் நாங்களும் ஒரு இனம்
இதை நினைத்து பார்க்கவும் இந்த கணம்

ரோட்டில் நடமாட முடியவில்லை
பள்ளி ,கல்லூரிகளில் சீட்டும் இல்லை

இதனால் தான் பயணிகளாய் பயணிக்காமல்
கை ஏந்துகிற வர்களாய் இருக்கிறோம் ......

திருநங்கை ..............

எழுதியவர் : ஷாபி (8-Jan-17, 11:53 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
Tanglish : naan thirunangai
பார்வை : 122

மேலே