உழவே உயிர்த்தெழு!

நஞ்ச புஞ்ச வித்துக் கூட
நாலு காசு பாத்திடலாம்!
நாடு வாழ சோறு போடும் உழவனோ
நாத்துப் படும் பாடு தனைப்
பாத்துப் பாத்து
மனசு நோகுறான்....
மாரடைப்பில் சாகுறான்!

மனித உயிரக் கூட
மண்ணப் போல
மிதிச்சி போகும் காலத்திலே
நெல்லு பயிர் காஞ்சா
நெஞ்சடச்சி சாகுறான்!

நீர் சுண்டி போகுதே
விவசாய நிலத்தினிலே...
செந்நீர் சுண்டி போகுதே
விவசாயி உடலினிலே...

பயிருக்கு உரம் போட்ட
விவசாயி
வயலுக்கே உரமாகுறான்!
மரம் நட்ட மகத்துவன்
சிரம் சாய்ந்து போகுறான்!

சல்லிக்கட்ட செல்போனில்
விளையாட சொன்னவுக...
நெல்லுசோத்த நெகிழித்தாளில்
பிரதி எடுத்துத் திம்பிகளா?

விளையாட்ட வினையாக்கி
வேடிக்க காட்டுறிக
விவசாயி உசுரத்தான்
விளையாட்டா எண்ணுறிக

உழவன்
சேத்தில் கால வச்சா தான்
நாம்
சோத்தில் கை வைப்போமே
உழவு நாட்டில் இல்லையேல்
கல்ல பொறுக்கி உண்போமா?

ஊழல் செஞ்சு செத்தவனோ
உத்தமனா ஆவுறான்...
உழவு செஞ்ச உத்தமனோ
விசம் குடிச்சி சாவுறான்..

என் மாட்டழிச்சி
தமிழ்நாட்டழிக்க எண்ணுறியா
செங்கோட்டையிலே தமிழ் குரல் ஒலிக்கும்
மோதி நீயும் பாக்குறியா

உழுதலுமே சல்லிக்கட்டும்
தமிழினத்தின் உயிர்
தமிழினத்தின் உணர்வு
அதுவே
தமிழினத்தின் உயர்வு

பசிக்கும்போது சோறு வரும் நினைவிலே உண்ண
சோறு தந்த விவசாயி தெருவிலே

கரம் கோர்ப்போம் உழவுக்கு
தளமிடுவோம் தமிழின வாழ்வுக்கு

வீழ்வது நாமாயினும்
வாழ்வது உழவாகட்டும்....

இளைஞனே கிளர்ந்து எழு!
தடையைத் தகர்த்து எறி!

நற்பாதை மலரட்டும்!
தமிழினம் வளரட்டும்!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (8-Jan-17, 9:53 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 488

மேலே