நதியாக தனியாக தவிக்கிறேன்

வாழ்க்கை என்னும் தொடர்வண்டி பெட்டிகள் இணைந்தே இருக்கும்
பாவாடை தாவணியில் அணிந்து வந்த பூலோகமே
பயணிக்கும் நாம் இடையே இடைவெளி எதற்கு
உன் கண்ணும் பாம்பையாய் குத்துதே
காற்றும் விஷமாக மறுத்தே
நீ கோபம் கொண்ட சில நொடிகளில்
தோல் மீது தோல் சாய்ந்துகொள்ள
ஆசை உண்டு ஆனால் உன் கோபம் கண்டு
சொல்ல பயம் உண்டு
நீயும் நானும் சேர வழி என்னவோ
மனதில் வலி மட்டும் உள்ளவே
கண்ணீரும் நீராவியாய் மாறுது தொடர்வண்டியும் ஓடுதே
அதுவும் என் சோகத்தை சத்தமாக பாடுதே
நதியாக தனியாக தவிக்கிறேன்
கடல் எனும் உன்னுடன் இணைந்துயிருக்க
கடல் நீரும் வற்றுமோ என் உயிரும் உன் உயிரும் ஒட்டுமே .
மு.க.ஷாபி அக்தர்