பாதகன் - பீட்டா

அன்னை தமிழ் நாட்டிலே
ஆரவாரமாய் எங்கள் ஊரிலே
காளை என்ற நண்பனை
கட்டி தழுவினோமடா !

அன்பில் கட்டி அனைத்து
ஆசையாய் திமிலில் பாய்ந்ததை
அடக்கி ஆள நினைத்து
அக்கிரமம் செய்தோமென கூறினாயடா !

ஆண்டாண்டு காலம் நிகழ்த்திய
அன்னை தமிழ் வீரத்தை
அரை நொடி பொழுதில்
அடியோடு அழித்திட நினைத்தாயடா !

மண் வாசம் அறியா
பாதகனே !

தடையிட வந்த உன்
தடையை தகர்த்து எறிந்து - உன்னையே
தடை செய்வோமடா பீட்டா !

எழுதியவர் : புகழ்விழி (22-Jan-17, 1:03 am)
பார்வை : 86

மேலே