கணவன்-மனைவி உரையாடல்-சிரிக்க, சிந்திக்க

மனைவி (கணவனிடம்) : எங்க ரொம்ப நாளா உங்கள ஒன்னு
கேக்கணும்னு நெனச்சிக்கிட்டே இருக்கேன்
இன்னிக்கி கேட்டப்புடறேனுங்க

கணவன் : அடி அசடே ,நமக்குள்ள என்ன எது இருந்தாலும்
கேளு தெரிந்ததை சொல்லிப்புடறேன்

மனைவி : இந்த உலகத்திலே உங்க மனதில் முதலிடம்
யாருக்குங்க
கணவன் : அடியே இதுல சந்தேகத்துக்கு இடமே இல்ல
தாய் தான் எப்போதும் எனக்கு முதலிடம்

மனைவி : (அழுதுண்டே) எங்க இது உங்களுக்கே
நியாயமா இருக்குதாங்க; நான் உங்க கட்டிய
மனைவிங்க ............நான் தானே உங்க
மனதுல முதலிடம் இருக்கணும் ........

கணவன் : அடியே மைக்கே; இது கூடவா உனக்கு தெரியல
என்னைப் பெற்றவள் தாய், என் மக்களுக்கு நீதாய்
இப்படி தாய் என்னும் பெண்ணே எப்போதும்
என் மனதில் முதலிடம்ன்னு சொன்னேன்
இப்போ புரியுதா.......

மனைவி : அப்பா! இப்போதாங்க என் மனசு லேசாகிச்சு !
நீங்க நீங்கதானுங்க........................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jan-17, 11:58 am)
பார்வை : 631

மேலே