கணவன்-மனைவி உரையாடல்
மனைவி (தூக்கத்தில் பிதற்றும் கணவனை எழுப்பி பேசுதல்)
ஐய, என்னங்க , என்னங்க கண் முழுச்சுக்கோங்க இது என்ன
பிதற்றல்; கனவில் யாரைக் கண்டீங்க ..................
"தேனே, தேன் சிட்டே, தெள்ளமுதே என்றெல்லாம்
உரக்க யாரை அழைக்கிறீங்க ?" தெரிஞ்சிக்கலாமா
கணவன் : ஹாங், ஹாங், என்னடி என்ன என் இப்படி
என்ன உலுக்கி எழுப்பினாய்
மனைவி : ஹுக்கும் யாருங்க அந்த கள்ள சக்களத்தி
உங்க கனவு கன்னி அவளை தேனே, பாலேனு
கூறி கும்மாளம் போடுறீங்க கனவிலே
கணவன் : அடி போடி போக்கத்தவளே , நீ தாண்டி அது
மனைவி : நேத்து ராத்திரி தானே சண்டையிலே
நீ என்ன வர வர நிலா வேம்பு மாதிரி கசக்கிறாய் என்று
சொன்னீங்க ; வேணாங்க விளையாட்டுக்கும் வேற
எவளையாவது இனிப்பு, தேனுண்ணு சொல்லாதீங்க
அந்த இனிப்பில் உங்களுக்கு நீரிழிவு ரோகம் வந்திடும்
நிலவேம்பு சற்று கசந்தாலும் உடம்புக்கு எப்போதும்
ஆரோக்கியம் தருங்க ....................!!!!!!!!!!
பேத்துவதை நிறுத்திட்டு என்னையே நினைச்சிண்டு
தூங்குங்க ......................... நானே வருவேன் கனவிலும்
கணவன் ( அசடுவழிய ) சரிம்மா நீ தான் எனக்கு துணை எப்போதும்
(என்று கூறி குப்புற படுக்கிறான் மீண்டும்)