ஆறாம் அறிவு

புகைவண்டி முன்னிற்கும்
------ பூவையிவள் யார்தானோ !
இமைப்பொழுதும் தளராது
------- இளையநிலா கைநீட்டச்
சுமைதாங்கும் வண்டியுமே
------- சுற்றாமல் நின்றிடுமே !
அமைகின்ற மூளையது
------- அனுபவத்தின் ஆறாம்அறிவு !!!!


வாழ்விற்கு அறிவுதனைப்
------- வரமெனவே பெற்றிட்டோம் .!
தாழ்வான எண்ணங்கள்
------- தவறிகூட எண்ணாமல்
வீழ்விற்கு பயன்படுத்தி
------- வீழ்தலுமே வேண்டாமே !
பாழ்படுத்தும் உலகினிலே
------- பயமின்றிப் பயணங்கள் !!!!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (2-Feb-17, 10:52 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 83

மேலே