வெட்கம் இல்லையா வெட்கமே இல்லையா
கோவில்வாசலில்
அந்த
இறைவனே
பாத்திரமேந்தி
யாசகம்கேட்க
சற்றும்
மதிக்காமலே
கல்லுக்கு
காணிக்கைப்போட
உள்ளே விரைகிறாயே
வெட்கம் இல்லையா?
உனக்கு வெட்கமே
இல்லையா?
பள்ளிக்குழந்தை
முதல்
பல்விழுந்த
முதியோர்வரை
உன்னை சுற்றிநிற்க-
நீயுமன்றி
ஏனையோரும்
மெல்லச் சாக
ரசித்து
ருசித்து இழுக்கிறாயே
புகையை.....
வெட்கமில்லையா?
உனக்கு
வெட்கமே இல்லையா?
எத்தனை நன்மை
இங்கேயிருக்க
குனிந்த தலை
நிமிராமல்
எண்ணம்
உயர்வு பெறாமல்
இலவச இணையம்
கிடைத்துவிட்டால்
உல்லாசம்கண்டு
மகிழ்கிறாயே...
வெட்கமில்லையா?
உனக்கு வெட்கமே
இல்லையா?
உச்சியில் வறுமை
வாட்டிவதைக்க
உச்சி வெயிலில்
தாய்
தந்தையோ
உடலுழைக்க
பட்டம்பெற்று
விட்டேனென
மெச்சிக்கொள்கிறாயே
முயற்சியின்றி
மூலையில்
முடங்குகிறாயே....
வெட்கமில்லையா ?
உனக்கு வெட்கமே
இல்லையா?
மனதில்
ஆசையை
வளர்த்துவிட்டு
பணப்பை
தீரும்மட்டும்
பழகிவிட்டு
இன்னொருவனை
தேடுகின்ற
பொய் மாதுவே...
வெட்கமில்லையா?
உனக்கு வெட்கமே
இல்லையா?
இனிதாய்
வார்த்தை
பேசிவிட்டு
இதயத்தில் ஆசையை
தூண்டிவிட்டு
இச்சைகள் மட்டும்
தணித்துவிட்டு
எண்ணியபடியே
கன்னியவளளை
புறக்கணிக்கும்
ஈனப்பிறவியே.....
வெட்கமில்லையா?
உனக்கு வெட்கமே
இல்லையா?
இதுமட்டுந்தானா?
இல்லை இல்லை..
இதே போன்று
நம் சமூகத்தினுள்ளே
எத்தனையோ
சாக்கடைகள்
சுத்திகரிக்கப்படாமல்
இருக்கிறதே
அதை எதிர்த்து
கவியெழுத துடிக்கும்
கவிஞனே..
ஏன் இன்னும்
தாமதிக்கிறாய்?
வெட்கமில்லையா?
உமக்கும்
வெட்கமேயில்லையா?