பூமழையாக விழுகிறது --முஹம்மத் ஸர்பான்
மனதில் பதிந்த
கனவுகளை
அழிக்கின்றேன்
பூக்கள் பூக்கும்
நினைவுகளை
பறிக்கின்றேன்
கடலில் நீந்தும்
மீன்களோடு
அழுகின்றேன்
எந்தன் சுவாசம்
முகவரியின்றி
அலைகின்றது
பாலை வனத்தில்
குடிசை போட்டு
உறங்குகின்றேன்
உலகத்து நதிகள்
என் கண்ணீரை
விலை பேசியது
மனதின் வலிகள்
இன்று பூமழையாக
புவியில் விழுகிறது