காதல் கூட்டம்

என்னோடு பேசு என்னோடு பேசு
தனிமையில் வாழ்கிறேன் பெண்ணே
உன் நினைவோடு.

என்னோடு பேசு என்னோடு பேசு
மௌனத்தில் பேசுகிறேன் பெண்ணே
உன் கனவோடு.

தொடர்கிறேன் உன்னோடு
தவிக்கிறேன் உன் நினைவோடு.

தூண்டிலில் புழுவாய் நான்
தவிக்கிறேன் உன் நினைவோடு.

பகலில் வரும் வின்மினிகள்
கண்களுக்கு தெரிவதில்லை

உன்னோடு வாழ்கின்றேன்
உனக்கு அது தெரியவில்லை.

எழுதியவர் : நா ராஜராஜன் (15-Feb-17, 1:34 pm)
சேர்த்தது : நா விஜயபாரதி
Tanglish : kaadhal koottam
பார்வை : 92

மேலே