அரசமரத்தடி பிள்ளையாரு
அரசமரத்தடி பிள்ளையாரு-வரன்கள்
அள்ளி அள்ளி தருவாரு
பக்தியுடன் அனுதினம் பூஜிப்பார்க்கு
அன்பு மழை பொழிவாரு
தங்க நகை வைர நகை ஏதுமிலை
இந்த தொந்தி கணபதிக்கு
காற்றும் மழையும் தான்
இவருக்கு அபிஷேகம்
சங்குப்பூவும் காட்டுமல்லியும் போதும்
எங்கள் அழகு அரசமரத்தடி தும்பிக்கையானுக்கு
எருக்கன் பூமாலை சாத்தி
அருகம் புல்லில் அர்ச்சித்தால்
எங்கள் அய்யன் கணபதி
ஏழை கூரைபிய்ய சொர்ண மழைப் பெய்திடுவான்
அம்மை அப்பனுக்கும் தம்பி வேலனுக்கும்
தத்துவப் பொருளாய் தோன்றிநிற்கும்
வேதத்தின் உட்பொருளாதான் எங்கள்
வெற்றி விநாயகன்
' அணுவுக்கு அணுவாய் அப்பாலுக்கப்பாலாய்'
அவ்வை சொல்லில் வந்தமர்ந்த
சூட்சும ஒளியே தும்பிக்கை நாயகன்
எங்க ஊர் அரசமரத்தடி விநாயகன்
தொழுகைக்கு எளியவன்
பாமரரும் வணங்கி துதிக்க
வெறும் தோப்பு கரணமும்,
சூடம் ஏற்றி தொழுதல் போதும்
என்ற நியதியே இங்கு எங்கள் ஊரில்
இவன் தொழுகைக்கு
பாவங்கள் போக்கிடுவான்
வறுமையைத் தீர்த்திடுவான்
புத்திர பாக்கியம் தந்திடுவான்
பிள்ளைகளுக்கு பெரும் கல்வி
அறிவும் ஆர்வமும் தந்திடுவான்
மூஷிக வாகனன் எங்கள்
அன்பு கணபதி எங்கள் குலம்
என்றும் மறவா வணங்கும்
ஓம்கார கணபதி
அரசமரத்தடி பிள்ளையாரு
அவன் பாதம் பற்றிடுவோம்
அவன் அன்பில் திளைத்திடுவோம்
நீங்களும் வாரீர்