பட்டிப் பொங்கல்
பட்டிப் பொங்கல்
ஆநிரை அழகு செய்து
பூமலர் பூசை வைத்து
நாவிரும்பி நன்றி செய்ய
கோவுக்கு ஒரு விழா
தொழுவச் சுத்தி செய்து
உழவு கருவியெலாம்
கழுவி தூய்மைகொள்ள
கழுத்துக்கும் சலங்கை
பொட்டிட்டு நீறொடு
பொங்கி படைத்து
பொழுதெலாம் போற்றி
தொழுகின்ற நன்னாள்
காளையொடு காளையரின் ஜல்லிகட்டு
களைகட்டும் விளையாட்டு
கலகலப்பு திருநாள்