காதல் தேவதை

எதிர்பாராத வேளையில்
எதிரில் வந்த பொன்மகளே
எங்கிருந்தாய் இத்தனை நாள் என்னவளே ..
அழகில் அடிமையாக்கி
அகதி ஆக்கினாய் ..
காவி துறவி நானும்
புது பிறவி கண்டேன் ..
உன்னால் இன்று
உணர்ந்தேன் நன்று ..


ஒரு நொடியில்
விழியால் என்னை முடிந்தாய் ..
காதல் கொடியாய்
உயிரில் படர்ந்தாய் ...
நீ வேண்டும் எனக்கு
காத்திருக்கிறேன் உனக்கு
வா ..துவங்குவோம் ...புது கணக்கு ..


இரவினில்
நிலவொளியினில்
கொலுசொலிதனில்
உன் இடை மேலே ...
என் விரல்கள் மெல்ல நடைபயில
குரலாலே நீயும் செல்ல தடை போட...
கட்டில் மேலே
தொட்டில் குழந்தை போலே ..
இருவரும் ஒட்டி உறவாட ..
கட்டி புரண்டு
வியர்வையில் நீராட ..


அதிகாலையில் ..
உன் மெட்டி ஒலி கேட்டு ..
பெட்டிபாம்பு போலே நானும் நடிக்க ..
தேனீ போலே நீ என் மேனியை கடிக்க ..
செல்லமாய் நானும் துடிக்க ..
புது பாடம் படிக்க ..
உன்னை கையில் ஏந்த
மகிழ்ச்சியில் நாம் நீந்த ..
ஆதாரமாய் நீயும் வந்திடு
என் தாரமாய் உன்னை தந்திடு ..
ஜோடி புறாக்களாய்
கூடி பறக்கலாம் ...
APPLE " I PAD " ல்
தினமும் கதைக்கலாம் .
ஆதாம் ,ஏவாள் ஆகி
ஏதேனில் APPLE சுவைக்கலாம் ..

by
நாஞ்சில் ஆலன்

எழுதியவர் : (24-Feb-17, 11:03 am)
சேர்த்தது : nanjilallen
Tanglish : kaadhal thevathai
பார்வை : 153

மேலே