காத்திருந்தே சாகிறேன்

காத்திருந்தே சாகிறேன்

உலகம் சுற்றும்
இளந்தென்றல் காற்றே
எங்காவது பார்தாயா
என் பூ இதழ் காதலியை……………..

நானும் காத்திருக்கிறேன்
ஆண்டு சில காலமாக
இன்னும் அவள் வர வில்லை…….

அவள் தோள் தாங்க
என் தோள் ஏங்குது……
காணாத கண்கள் எங்க தான் தூங்குது…….

என்னோடு வருவாலோ..
கண்களால் சிரிப்பாலோ…..
கை விரல் தீண்டிட அனுமதி
தருவாலோ……….

ஒட்டி ஒட்டி நாம் நடக்க
வெட்க்கத்தை விடுவாலோ…………..
என் கன்னம் சிவந்திட
முத்தம் தான் தருவாலோ…..

கட்டி அனைத்திட காத்திருக்க
சொல்வாலோ….
போதும் போதும் என
காதலித்து கொல்வாலோ………

திருமண மேடையில்
கண்ணீர் தான் விடுவாலோ…….
என் பிள்ளை நான் சுமக்கும்
வரத்தை தான் தருவாலோ………
நாற்பதை தாண்டியும்
கொஞ்சி கொஞ்சி தீர்பாலோ……..

தலை முடி நரைத்திடும்
காலங்கள் வந்தாலும்
கையோடு கை கோர்த்து
என்னுடன் கிடப்பாலோ………

பாச கையிரு வீசி
எம தர்மன் வருகையில்
நான் முதலில் செல்வேனே…………
எங்களுக்கான இடம் பார்த்து
பின் அழைத்து கொள்வேனே…………….

உலகம் சுற்றும்
இளந்தென்றல் காற்றே
சீக்கிரம் அழைத்து வா
என் செந்தமிழ் காதலியை…………………


---- அதார் உதார் விக்கி ……

எழுதியவர் : அதார் உதார் விக்கி (25-Feb-17, 10:58 pm)
பார்வை : 174

மேலே