கண்களால் மீன்களை நீரில்த் தேடுபவன்

ஓர் ஆறு...
அங்கே அழகிய மீன்கள் பல துள்ளி விளையாட...
நானோ ஏதோ நினைப்பில்!!!
எனக்கு அவைகளை பிடித்துவிடும் எண்ணமும் இல்லை...
அவைகளைப் பிடிக்கும் வலையும் இல்லை...
பிடிக்கும் முறையையும் நான் அறிந்திருக்கவில்லை...
நான் காணும்போது அடிக்கடித்துள்ளும் இரு மீன்கள்
சட்டென நீரிலிருந்து துள்ளிவிழ. - நான்
அப்பொழுது அவைகளைக் கண்டிருக்கக் கூடாது...
அவைகள் துள்ளியது எனக்காக அல்ல என்றறிந்தும்
இப்பொழுது தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்...
அங்கே ஆற்று நீரில் கலந்துபோன
என் நினைவுகளைக் கலைத்துப் போன
அந்த இரு அழகிய இரு மீன்களையும்...
கிடைத்துவிடும் என்று நம்பிக்கை இல்லையென்றாலும்
தேடி அலைவதில் என்னவோ இன்பத்தை உணர்ந்தவனாய்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (25-Feb-17, 11:41 pm)
பார்வை : 137

மேலே