நமது தேசம் நம் உரிமை
விதைகள் விளம்பரப்
படுத்திக் கொள்வதில்லை
ஆனாலும் விருட்சமாகி
பலன் கொடுக்கும்
என்பதை உணர்த்த
சாக்கடையாகிப் போன
அரசியலை
சகதி அகற்றி
தெளிந்த நீரோடையாக்க
தற்கொலை படையென
எங்கள் இளைஞர்
படை
களத்தில் குதித்துள்ளது!
அன்று தலைமை இன்றி
பதிவு செய்த
வெற்றியைப் போல்
இன்று ஒரு தலமையின்
கீழ் பதிவு செய்வோம்.
'நம் தேசத்தில்'
'நமது உரிமையை'.
ஆளுமையுடன் கூடிய
சுயநலமற்ற நல்ல
தலைமையை
இனம் காணவேண்டிய
தலையாயப் பணி
கண்முன்னே யார்
என்ற கேள்விக்குறியோடு?
#sof_sekar