இருக்கும் ஒன்று இல்லாமல் ஒன்று
காலத்தை கடந்து உலகின் மூலத்தை உருவாக்கியவன்...
மூலத்தை முளைக்க வைத்து நிர்மூலமாய் நிற்க வைத்தவன்...
முற்றும் துறந்தவன். முற்று பெறாமல் துறக்கவும் வைப்பவன்....
நானும் நீயும் பிறக்க காரணமாக இருந்தவன்....
ஈரையும் பேனையும் பெருமாளையும் உருவாக்கி வளர்த்தவன்....
அனைத்து மதங்களும் உருவாக காரணமாய் இருந்தவன்....
மனிதர்களுக்கு மதம் பிடிக்க வைத்து மனிதம் மறக்கடிக்க வைத்தவன்....
பிச்சைக்காரர்களையும் அவருக்கு பிச்சைபோட நம்மை போல உயரிய வகை பிச்சைகாரர்களையும் சேர்த்து அனுப்பியவன்....
ஏன் எதற்காக என கேட்க வைத்தவன்....
கேட்டால் பதில் தெரியதவர்களையும் சேர்த்தே செய்தவன்....
முன்னோர்களை அறிவுடன் படைத்தவன்....
இன்னோர்களை மதி இழக்க செய்தவன்...
குரூரங்களில் குணங்களை படைக்க தவறியவன்...
அரவங்களை படைத்தது அமைதி இழக்க வைத்தவன்....
அமைதி திரும்ப பெற சில உருவங்களை பூமிக்கு அனுப்பியவன்....
அனுப்பியவர்களை திரும்பவும் அழைத்துகொண்டவன்....
யாருக்கும் இதுவரை தெரியாதவன்....
கேட்டால் உணரும் உயிருக்கு தெரிவான் என்பவன்....
அறிவியலாம் ஒன்று உருவாக காரணமானவன்.....
அந்த அறிவியலாலும் அறிந்து கொள்ள முடியாமல் செய்வித்தவன்....
அணு முதல் அண்டம் வரை உருவாக்கியவன்....
இதுவரை தனக்கென ஒரு உருவமில்லாதவன்....
இத்தனையாய் இருந்தும் இது வரை யார் கண்ணிலும் படாதவன்....
யார் அது,
நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்...
மனதிலே நினைத்துக்கொள்ளுங்கள்....
உங்களை அறிந்துகொள்ளுங்கள்....
உங்கள் அறிவை திறந்து கொள்ளுங்கள்....