சம்சாரம்
எந்த ஜென்மத்தில்
என்ன பாவம்
செய்தேனோ
இந்த ஜென்மத்தில்
நீ எனக்கு மனைவி...
விட்டுகொடுத்து
விட்டுகொடுத்து
மெய் மறத்துப்போச்சு
இனி ஏதுமில்லை
விட்டுகொடுக்க
என் உயிரை தவிர...
என் வீட்டு முற்றத்தில்
சிட்டுக்குருவி
கூடு கட்டிவாழ்ந்தது
உன் அலம்பலும்
புலம்பலும் தாங்காமல்
கூட்டைவிட்டு பறந்தது
ஒரு கட்டத்தில்...
அரசனும் ஆண்டியாவது
நிச்சயம் உன்னைப்போல்
மனைவி அமைந்து விட்டால்
உலகத்தில் மாபெரும்
தண்டனை எதுவென்றால்
அது உன்னோடு
வாழ்வது ஒன்றே...
திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்
என்ற வரிகள் உனக்காகவே
எழுதப்பட்டது போலும்
குடும்பத்தில் பாரமில்லை
உன் கொடுமையில் பாரம் கண்டேன்......
குடும்பத்தை அரவனைக்க
ஆதரிக்க உன்னை தேர்ந்தேடுத்தார்கள்
பிரித்துவைக்க அல்ல
குருக்ஷேத்ரம் கூட
பதினெட்டு நாள் தான்
உன்னுடைய போர்
எத்தனை நாட்களோ...
இன்னும் வாழ
காலங்கள் உண்டு
வாழ்வது ஒருமுறை
அதை அனைவரும்
போற்றும்படி வாழ்ந்தால்
நிலைத்திருக்கும் உன்
புகழ் இவ்வையகம் உள்ளவரை...