எல்லை தாண்டி செல்லாதே

ஸ்டிக்கர் பொட்டு வட்டமாக
வாழ்க்கை என்ன கசக்குதா!
தேவதை நடந்து தெருவில் போக
நான் நிற்பது என்ன மறக்குதா!
சிரித்து பேச அருகில் வந்தால்
விலகி செல்வது நியாயமா!
பூரி கட்டை தலையை தாக்க
என் மீது என்ன கோபமா!
அழகென்ற சொல்லுக்கு அர்த்தம்,
நானென்று நானத்துடன் நீ சொல்ல!
நாள் சுவற்றுக்குள் நல்லதொரு இரவை தேடி
கணவன் – மனைவி எனும் உறவை கொண்டு
முத்த மழையில் நன்றாக நனைந்தோமே!
இன்று அழகிய திருமகள் நான், அருகில் இருக்க
புது அழகியை கண்டு ஆசை உனக்கு பிறக்க
வழிந்துக்கொண்டு அவள் விழியை நீ காண
போனால் போகுது என்று நான் போக, நீயோ!
அவள் செல்லும் இடமெல்லாம் சென்று
கண்களில் தென்பட முயல்கிறாயே
ஜொல்லு விட்டு இதழ்களில் உனக்கு நீர் சுரக்க
பல்லுக்கொட்டும் என்பதை ஒரு நாளும் மறவாதே
தேனியாய் உன்னை சுற்றி தெம்மாங்கு நான் பாட
சலிப்பை பரிசளித்து இனிப்பை தவிர்க்கிறாயா!
என்னை விட்டு வேறு பெண்ணை பார்த்தால்
கொட்டக்கூட செய்வேன்! மறந்துவிடாதே!